பள்ளி வாகனங்கள் ஆய்வு 96க்கு 79 பாஸ்; 17 பெயில்

திருத்தணி:திருத்தணி கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, திருவாலங்காடு, திருத்தணி ஆகிய பகுதிகளில் உள்ள 39 தனியார் பள்ளிகளின், 96 வாகனங்களை ஆய்வு செய்யும் பணி, திருத்தணி அருகே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது.

திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற ஆய்வில், டி.எஸ்.பி., கந்தன், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

வாகனங்களில் கதவு, வேகக் கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பான், அவசரகால கதவுகள், 'சிசிடிவி' கேமரா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அதன்பின், தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்றிய 79 பள்ளி வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. விதிமுறைகளை பின்பற்றாத 17 வாகனங்கள் நிராகரிக்கப்பட்டது.

Advertisement