துபாய் விமானம் ரத்து

அவனியாபுரம்: துபாய்-- -மதுரை விமானம் நேற்று ரத்து செய்யப்பட்டது.

துபாயிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் தினமும் காலை 11:10 மணிக்கு மதுரை வந்து மதியம் 12:05 மணிக்கு மீண்டும்துபாய் புறப்பட்டு செல்லும். இந்த விமானம் இரண்டு நாட்களுக்குமுன் 8 மணி நேரம் தாமதமாக வந்தது.

அதில் துபாய் செல்ல இருந்த பயணிகள் பயணத்தை ரத்துசெய்தனர். இந்நிலையில் அந்த விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நேற்று வருகை, புறப்பாடு இரு சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் வீடு திரும்பினர்.

Advertisement