கருண் நாயர் இரட்டை சதம்: இந்தியா 'ஏ' அணி அசத்தல்

கேன்டர்பரி: கருண் நாயர் இரட்டை சதம் விளாச, இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 557 ரன் குவித்தது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் கேன்டர்பரியில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 409/3 ரன் எடுத்திருந்தது. கருண் (186), ஜூரெல் (82) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில், 4வது விக்கெட்டுக்கு 195 ரன் சேர்த்த போது துருவ் ஜூரெல் (94) சதமடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். நிதிஷ் குமார் ரெட்டி (7) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய கருண் நாயர், முதல் தர போட்டியில் தனது 4வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இவர், 204 ரன்னில் (ஒரு சிக்சர், 26 பவுண்டரி) ஆட்டமிழந்தார். ஷர்துல் தாகூர் (27), ஹர்ஷ் துபே (32), அன்ஷுல் கம்போஜ் (23) ஆறுதல் தந்தனர். ஹர்ஷித் ராணா (16) நிலைக்கவில்லை.
இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 557 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இங்கிலாந்து லயன்ஸ் அணி சார்பில் ஜோஷ் ஹல், ஜமான் அக்தர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி, தேநீர் இடைவேளைக்கு பின் 141/2 ரன் எடுத்திருந்தது. இந்தியா 'ஏ' சார்பில் அன்ஷுல் கம்போஜ், ஹர்ஷ் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
மேலும்
-
ரசிகர்களை பார்த்ததும் வாயில் வார்த்தைகள் வரவில்லை; பிறந்த நாளில் இளையராஜா நெகிழ்ச்சி!
-
வார துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.71,600!
-
சுழற்றி வீசிய புழுதிப்புயல்; தரையிறங்க முடியாமல் தவித்த இண்டிகோ விமானம்
-
எரிசாம்பல் கற்களால் கட்டப்பட்ட வீட்டில் வெப்பத்தின் தாக்கம் குறையும்!
-
சட்டவிரோத குடியேற்றம்: ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நாடு திரும்பிய வங்கதேசத்தினர் 2 ஆயிரம் பேர்!
-
தேங்காய் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு; சர்வதேச நிலவரத்தால் தாக்கம்