முட்டுக்காடு படகு குழாமில் சுற்றுலா பயணியர் குதுாகலம்

திருப்போரூர்,:முட்டுக்காடு படகு குழாமில் நேற்று, சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
திருப்போரூர் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடில், நீர் விளையாட்டு மையமாக படகு குழாம் உள்ளது.
இந்த படகு குழாம், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால், 1984 முதல் இயக்கப்படுகிறது.
இந்த படகு குழாம் உள்ள பகுதியில் ஆழம் 3 அடி முதல், 6 அடி வரை உள்ளது.
துடுப்பு படகு, இயந்திர படகு, விரைவு படகு, வாட்டர் ஸ்கூட்டர் வகை படகுகள் என, 46 படகுகள் இங்கு இயக்கப்படுகின்றன.
வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறை நாட்களில், இங்கு பொழுதுபோக்குவதற்காக ஏராளமான சுற்றுலா பயணியர் வருவர்.
அந்த வகையில், நேற்று வார விடுமுறை ஒரு பக்கம் இருந்தாலும், பள்ளிகளின் கோடை விடுமுறையின் கடைசி நாளாகவும் இருந்ததால், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சுற்றுலா பயணியரின் வருகை அதிக அளவில் இருந்தது.
இதனால், முட்டுக்காடு படகு குழாம் களைகட்டியது.
சுற்றுலா பயணியர் தங்களின் விருப்பத்திற்கேற்ப, பல்வேறு விதமான படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மேலும்
-
கால்வாய் அடைப்பு பிரச்னை: தமிழக மாசு கட்டுப்பாடு அமைப்புக்கு நோட்டீஸ்
-
நல்ல அரசியல் தலைவருக்கு அழகு; செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதிலடி
-
கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை: கர்நாடகாவில் துணிகர சம்பவம்
-
உப்புமா கிடையாது; அங்கன்வாடிகளில் பிரியாணி கேரளா அரசு முடிவு
-
விரைவு ரயிலில் அதை செய்யாதீங்க: அன்பு மணி வலியுறுத்தல்
-
போரை நிறுத்த பாக்., ஓடோடி வந்தது ஏன்: முப்படை தலைமை தளபதி விளக்கம்