சென்னை அணி அதிர்ச்சி தோல்வி: அல்டிமேட் டேபிள் டென்னிசில்

ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் ஏமாற்றிய சென்னை அணி 7-8 என, கோல்கட்டாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

ஆமதாபாத்தில் (குஜராத்), அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின.

ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் கோல்கட்டாவின் அங்கூர் பட்டாசார்ஜி 3-0 என, சென்னையின் கிரில் ஜெராசிமென்கோவை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் பான் சிகி (சென்னை) 3-0 என, செலினாவை (கோல்கட்டா) தோற்கடித்தார். கலப்பு இரட்டையர் போட்டியில் அசத்திய பான் சிகி, பயாஸ் ஜெயின் ஜோடி (சென்னை), 2-1 என அட்ரியானா டயஸ், அங்கூர் ஜோடியை (கோல்கட்டா) வென்றது.

ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் ஏமாற்றிய சென்னையின் பயாஸ் ஜெயின் 1-2 என குவாட்ரி அருணாவிடம் (கோல்கட்டா) வீழ்ந்தார். அடுத்து நடந்த பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் சென்னையின் பைஸ்யா 1-2 என அட்ரியானாவிடம் (கோல்கட்டா) தோல்வியடைந்தார்.
முடிவில் சென்னை அணி 7-8 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

Advertisement