சாட்காம் ஸ்பெக்ட்ரம் கட்டணம் 'டிராய்' பரிந்துரைக்கு எதிர்ப்பு

புதுடில்லி : செயற்கைக்கோள் அடிப்படையிலான தகவல் தொடர்பு சேவைகளுக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து, டிராய் தனது பரிந்துரைகளை அண்மையில் தெரிவித்திருந்தது. இதற்கு, இந்திய செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தொலைத்தொடர்பு துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
டிராயின் பரிந்துரைகள், நிலப்பரப்பு பிராட்பேண்டு சேவை வழங்குபவர்களுக்கு எதிராக, வணிக ரீதியிலான செயற்கைக்கோள் சேவை வழங்குபவர்களுக்கு நன்மைகளை வழங்குவதாக இருக்கிறது.
இவை செயல்படுத்தப்பட்டால், போட்டித்தன்மை குறையும். முன்மொழியப்பட்ட ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் ஜி.எஸ்.ஓ., அடிப்படையிலான 'விசாட்' சேவைகளில் தற்போது விதிக்கப்படும் கட்டணங்களை விடவும் குறைவானதாகும்.
இந்த கட்டணங்களை பரிந்துரைப்பதற்கான தெளிவான காரணத்தையோ அல்லது விளக்கத்தையோ டிராய் வழங்கவில்லை. மேலும், நிலப்பகுதி சேவை வழங்குநர்கள் தொடர்ந்து, முன்கூட்டிய ஏலத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் செலவுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் குற்றச்சாட்டுகளை, டிராயின் தலைவர் லஹோட்டி திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், “நிலபரப்பு நெட்வொர்க் திறனுக்கும், செயற்கைக்கோள் நெட்வொர்க்கிற்கும் இடையே பெரிய வேறுபாடுகள் இருப்பதால், சாட்காம் சேவைகள், நிலப்பரப்பு சேவைகளுடன் போட்டியிடுகின்றன என்பது உண்மையல்ல,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும்
-
2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு; மத்திய அரசு அறிவிப்பு
-
இந்தியா குறித்து பிலாவல் பூட்டோ உளறல்: ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த பத்திரிகையாளர்
-
பெங்களூரு வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பலி
-
டில்லி ரோஹினியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கி உள்ளதாக அச்சம்
-
பாகிஸ்தானுக்கு ரூ,6,700 கோடி கடன்; ஆசிய வளர்ச்சி வங்கி முடிவுக்கு இந்தியா கண்டனம்
-
ரூ.40 லட்சம் மதிப்பிலான பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் மெழுகு சிலை திருட்டு