என் வாழ்நாளின் சிறந்த அனுபவம் அயோத்தி ராமர் கோவில் பயணம்;எலான் மஸ்கின் தந்தை நெகிழ்ச்சி

அயோத்தி: ''அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றது என் வாழ்நாளின் சிறந்த அனுபவங்களில் ஒன்று,'' என ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க் கூறினார்.
எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க், இந்தியா வந்துள்ளார். அவர் இன்று உ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவரது மகள் அலெக்ஸாண்ட்ரா மஸ்க் உடன் வந்திருந்தார். அருகிலுள்ள ஹனுமன்கர்ஹி கோவிலுக்கும் அவர்கள் சென்றனர்.
ராமர் கோவில் பயணம் குறித்து எரோல் மஸ்க் கூறியதாவது:
தனது வாழ்நாளின் மிகச் சிறந்த அனுபவங்களில் ஒன்று, இந்தியா அருமையான, அற்புதமான நாடு. இந்திய கலாசாரம், விருந்தோம்பல்,அன்பு, கருணை நிறைந்த மக்கள் கொண்ட நாடாக உள்ளது. இந்தியா ஒரு அற்புதமான இடம். முடிந்தவரை பலர் இந்தியாவுக்கு வர வேண்டும்,
எங்களிடம் சில வணிக திட்டங்கள் உள்ளன, அவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா-அமெரிக்க உறவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. இவ்வாறு எரோல் மஸ்க் கூறினார்.





மேலும்
-
மக்களே, உஷாரா இருங்க; நாடு முழுவதும் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு
-
பாகிஸ்தானில் ஏழ்மை நிலையில் 10 கோடி பேர்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
-
டிரம்ப்- மஸ்க் மோதல் உச்சம்; டெஸ்லா நிறுவன பங்குகள் கடும் சரிவு
-
காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
-
தருமபுரியில் மலையாள நடிகரின் கார் விபத்து; தந்தை பரிதாப பலி