டிரம்ப்- மஸ்க் மோதல் உச்சம்; டெஸ்லா நிறுவன பங்குகள் கடும் சரிவு

வாஷிங்டன்: டிரம்ப் உடனான மோதலை அடுத்து எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் விலை 14 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்- தொழிலதிபர் எலான் மஸ்க் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. டிரம்ப், எலான் மஸ்க் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருவதால் அமெரிக்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டிரம்ப் உடனான மோதலை அடுத்து எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் விலை 14 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 150 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பு படி ரூ.13.14 லட்சம் கோடி) சரிந்துள்ளது.
எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன. மஸ்க்- டிரம்ப் உடனான மோதல் அதிகரித்து வரும் நிலையில் டெஸ்லா பங்குகள் மேலும் சரிவடையும் என முதலீட்டார்கள் கணித்துள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டிற்கு பிறகு, டெஸ்லா பங்குகள் உயர தொடங்கியது. கடந்தாண்டு, அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்ற போது, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு உயர தொடங்கியது. அவரது நிறுவன பங்குகள் மதிப்பும் உயர துவங்கியது. தற்போது மோதலால் சரிவை நோக்கி சென்றுள்ளது.







மேலும்
-
வண்டலுாரில் இலவச மருத்துவ முகாம்
-
கண்காணிக்கலாமே * ஆட்டோக்களில் அதிகளவில் ஏற்றப்படும் பள்ளி சிறார்கள் * அரசு துறையினர் கண்டுக்காததால் அதிகரிக்கும் விபத்துக்கள்
-
லாரியுடன் கார் உரசி வாக்குவாதம் வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில் நெரிசல்
-
அமித்ஷாவின் வருகை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அர்ஜூன் சம்பத் நம்பிக்கை
-
ரூ.9.84 லட்சம் பண இரட்டிப்பு மோசடி மல்லிகை பூவை வைத்து ஏமாற்றிய தந்தை மகன் கைது
-
பைக் மீது லாரி மோதி மின்வாரிய ஊழியர் பலி