இந்திய ஜோடி வெற்றி * இந்தோனேஷிய பாட்மின்டனில்

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ்குமார் கருணாகரன், ஆத்யா ஜோடி, தைவானின் நிக்கோல் சன், ஹாங் வெய் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை 15-21 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த செட்டை 21-16 என கைப்பற்றியது. பின் நடந்த 3வது செட்டையும் இந்திய ஜோடி 21-17 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 15-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் காயத்ரி, திரீஷா ஜோடி உக்ரைனின் புக்ரோவா, கான்ட்மெர் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 21-14, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது.
இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 11-21, 21-16, 14-21 என மலேசியாவின் சென், டோவ் ஜோடியிடம் தோற்றது. ரோஹன், ருத்விகா ஜோடி 14-21, 9-21 என ஜப்பானின் ஹோபரா, ஷிமோகனி ஜோடியிடம் வீழ்ந்தது.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், இந்தோனேஷியாவின் லோ கியிடம் 20-22, 9-21 என தோல்வியடைந்தார்.
மேலும்
-
மக்களே, உஷாரா இருங்க; நாடு முழுவதும் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு
-
பாகிஸ்தானில் ஏழ்மை நிலையில் 10 கோடி பேர்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
-
டிரம்ப்- மஸ்க் மோதல் உச்சம்; டெஸ்லா நிறுவன பங்குகள் கடும் சரிவு
-
காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
-
தருமபுரியில் மலையாள நடிகரின் கார் விபத்து; தந்தை பரிதாப பலி