அரையிறுதியில் கோகோ காப்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு அமெரிக்காவின் கோகோ காப் முன்னேறினார்.
பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப், மடிசன் கீஸ் மோதினர். 'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை 6-7 என இழந்த கோகோ காப், பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய இவர், 6-1 என வென்றார். இரண்டு மணி நேரம், 11 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய கோகோ காப் 6-7, 6-4, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, பிரான்சின் லோயிஸ் போய்சன் மோதினர். இதில் ஏமாற்றிய ஆன்ட்ரீவா 6-7, 3-6 என தோல்வியடைந்து வெளியேறினார்.
அரையிறுதியில் சின்னர்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் மோதினர். இதில் சின்னர் 6-1, 7-5, 6-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பால் மோதினர். அபாரமாக ஆடிய அல்காரஸ் 6-0, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மேலும்
-
மக்களே, உஷாரா இருங்க; நாடு முழுவதும் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு
-
பாகிஸ்தானில் ஏழ்மை நிலையில் 10 கோடி பேர்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
-
டிரம்ப்- மஸ்க் மோதல் உச்சம்; டெஸ்லா நிறுவன பங்குகள் கடும் சரிவு
-
காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
-
தருமபுரியில் மலையாள நடிகரின் கார் விபத்து; தந்தை பரிதாப பலி