ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,080 ரூபாய்க்கும், சவரன், 72,640 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 113 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 9,090 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 72,720 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 114 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement