நாவல் பழம் கிலோ ரூ.200க்கு விற்பனை

சென்னை :ஆண்டுதோறும், ஜூன் துவங்கி ஆக., மாதம் வரை, நாவல் பழம் சீசன் இருக்கும். தற்போது, தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவிலும், நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளது. இதனால், கோயம்பேடு சந்தைக்கு நாவல் பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.

சேலம், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் விளையும் நாவல் பழங்கள், மூங்கில் கூடைகளில் வைத்து விற்பனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்து அனுப்பப்படுகின்றன. கிலோ நாவல் பழம் 150 முதல் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement