பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் லிட்டருக்கு ரூ.10 விலை சரிவு
சேலம் :இந்தியாவில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் தேவைக்கு, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மாதந்தோறும் சராசரியாக, 6 லட்சம் டன் பாமாயில், 3 லட்சம் டன் சோயா எண்ணெய், ஒரு லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. அதற்குரிய இறக்குமதி வரி, 26.5 சதவீதம் இருந்ததை மத்திய அரசு கடந்த வாரம், 16.5 சதவீதமாக குறைத்தது.
இதுகுறித்து சேலம் மாநகர தாவர எண்ணெய் வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரதாசன் கூறுகையில், ''இறக்குமதி வரி குறைப்பால், கடந்த மாதம் ஒரு லிட்டர் பாமாயில், 140க்கு விற்றது, தற்போது, 130 ரூபாயாகவும், கடந்த மாதம் லிட்டர், 170க்கு விற்ற சூரியகாந்தி எண்ணெய், தற்போது, 160 ரூபாயாகவும் குறைந்துள்ளது,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இளைஞர்கள் அதிகாரம் பெற்றுள்ளனர்: மத்திய அரசு திட்டங்களை பட்டியல் போட்டு அண்ணாமலை பெருமிதம்
-
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி: கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்
-
பாகிஸ்தான் மனிதகுலத்திற்கு எதிரானது: காஷ்மீரில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
Advertisement
Advertisement