வெண்டைக்காய் விலை வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில், கிலோ 35 ரூபாய்க்கு விற்ற வெண்டைக்காய், வரத்து அதிகரிப்பால் வீழ்ச்சி அடைந்து, 10 ரூபாய்க்கு விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், அதிக ஏக்கரில் வெண்டைக்காய் பயிரிடப்படுகிறது. சில நாட்களாக மார்க்கெட்டுக்கு வரத்து குறைவாக இருந்ததால், வெண்டைக்காய் விலை உயர்ந்து கிலோ 35 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில், இரண்டு நாட்களாக வெண்டைக்காய் வரத்து அதிகரித்துள்ளதால், விலை படுவீழ்ச்சி அடைந்து, கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

வெண்டைக்காய் வியாபாரி ஒருவர் கூறுகையில், 'வரும் நாட்களில் வரத்து அதிகரிக்கும் நிலையில், மேலும், விலை குறைய வாய்ப்புள்ளது' என்றார்.

Advertisement