சேப்பாக்கம் அணி அபார வெற்றி: நெல்லை அணியை வீழ்த்தியது

கோவை: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய சேப்பாக்கம் அணி 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் சேப்பாக்கம், நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
சேப்பாக்கம் அணிக்கு கேப்டன் பாபா அபராஜித் (41) நம்பிக்கை தந்தார். அபாரமாக ஆடிய ஆஷிக் (54), அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய விஜய் சங்கர், சச்சின் ரதி வீசிய 16வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். உதய் குமார் வீசிய 18வது ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் விளாசிய ஸ்வப்னில் சிங், யுதீஸ்வரன் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர் அடித்தார். ஸ்வப்னில் 45 ரன்னில் ஆட்டமிழந்தர்.
சேப்பாக்கம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்தது. விஜய் சங்கர் (47) அவுட்டாகாமல் இருந்தார்.
அருண் அரைசதம்: கடின இலக்கை விரட்டிய நெல்லை அணிக்கு சந்தோஷ் குமார் (10), ஹரிஷ் (14), ரித்திக் ஈஸ்வரன் (12), சோனு யாதவ் (15) சோபிக்கவில்லை. குருசாமி அஜிதேஷ் (1), நிர்மல் குமார் (3) சொற்ப ரன்னில் வெளியேறினர். அபாரமாக ஆடிய கேப்டன் அருண் கார்த்திக் 42 பந்தில் 51 ரன் விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த முகமது அத்னன் கான் (48) ஓரளவு கைகொடுத்தார்.
நெல்லை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்து தோல்வியடைந்தது. உதய் குமார் (1), யுதீஸ்வரன் (1) அவுட்டாகாமல் இருந்தனர். சேப்பாக்கம் அணி சார்பில் அபிஷேக் தன்வர் 3, ஸ்வப்னில் சிங், சிலம்பரசன் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
மேலும்
-
ஆபத்தில் சிக்குபவர்கள் அழைத்தால் 'மின்னல் வேகத்தில் உதவி கிடைக்கும்'; புதிய திட்டம் அமல்
-
வருவாய் நீதிமன்றங்களில் 'ஆன்லைன்' மனு வசதி
-
ஒரே நேரத்தில் 2 'டிகிரி' படிக்க யு.ஜி.சி., அனுமதி
-
322 மாணவர் விடுதிகளில் உணவுக்கு தட்டுப்பாடு
-
'என்னால் படிக்க முடியல' மாணவர் தற்கொலை
-
காணொலி மூலம் பேச முதல்வர் திட்டம் தலைமையாசிரியர்களுக்கு தலைசுற்றல் * 'பஞ்சாயத்தில்' ஹைடெக் லேப்கள்