தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு 

சென்னை : தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,980 ரூபாய்க்கும், சவரன் 71,840 ரூபாய்க்கும் விற்பனையானது.

வெள்ளி கிராம், 117 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 8,955 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

சவரனுக்கு 200 ரூபாய் சரிவடைந்து, 71,640 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 118 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Advertisement