ஹைதராபாத் முட்டை காகினா

இந்த முட்டையை வைத்து, இம்முறை பெர்ஷியன் - முகலாயர்கள் பயன்படுத்திய 'ஹைதராபாத் அண்டா கா காகினா' எனும் ஹைதராபாத் முட்டை காகினா செய்யலாம்.
செய்முறை
பேனில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும், இரண்டு பெரிய வெங்காயத்தை வெட்டிப் போட்டு வதக்கவும்
வதங்கும்போது, ஒரு ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், இரண்டு பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு சேர்க்கவும்
வெங்காயத்தின் நிறம் மாறி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் வாசனை போன பின், இரண்டு முட்டைக்கு தேவையான அளவு உப்பு போட்டு கலந்துவிடவும்
உப்பு போட்ட 30 விநாடிகள், முட்டையை 'ஹாப் பாயில்' போடுவது போல உடைத்து ஊற்றுங்கள். வேறு எதுவும் செய்ய கூடாது
முட்டையின் மஞ்சள் கரு வேகக் கூடாது
இதற்கிடையில், 3 - 4 பல் பூண்டு இடித்து, அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய் துாள் சேர்க்கவும்
இதை ஸ்பூன் வைத்து கலந்து விட்டு வேகும் முட்டையின் மீது ஆங்காங்கே துாவிவிடவும்
அவ்வளவு தான் 'ஹைதராபாத் முட்டை காகினா' ரெடி.
ஒரு முறை இதை குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். அதன் பின்னர், குழந்தைகள் வெறும் முட்டை வேண்டாம். ஹைதராபாத் முட்டை காகினா தான் வேண்டும் என்று அடம் பிடிப்பர்.
மேலும்
-
பெங்களூரு சம்பவம் எதிரொலி: வெற்றி கொண்டாட்டங்களுக்கு வழிகாட்டுதல்களை வகுக்க குழு அமைத்தது பிசிசிஐ
-
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் வீரர்கள் 30 பேர் பலி
-
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
-
மின்மாற்றியின் திறன் மேம்படுத்தும் பணி
-
தமிழ் உலகமொழியாக மாற வேண்டும்: கவர்னர் ரவி பேச்சு
-
அ.தி.மு.க., கூட்டணியை கண்டு பயம்: இ.பி.எஸ்., விளாசல்