விஜயமங்கலம் பாரதி அகாடமி மாணவன் நீட் தேர்வில் அபாரம்

பெருந்துறை, பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் பாரதி அகாடமி மாணவன் அகிலன், நீட் தேர்வில், தேசிய அளவில், 928 ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார். இயற்பியலில், 152 மதிப்பெண், வேதியியல்-131, உயிரியலில்-325 மதிப்பெண்கள் என, 720க்கு, 608 பெற்றுள்ளார். பாரதி இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பிளஸ் ௨ படித்தவர். சச்சின்-557 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், தனிகா-556 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.



நீட் தேர்வு எழுதிய, 150 மாணவர்களில், 70க்கும் மேற்பட்டோருக்கு, நடப்பாண்டு மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக நிறுவனத்தின் தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார். வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சியாளர்களை, பாரதி கல்வி நிறுவன தாளாளர் மோகனாம்பாள் பாராட்டினார்.

Advertisement