ஜிம்னாஸ்டிக்ஸ்: பிரனதி 'வெண்கலம்'

ஜேசியான்: தென் கொரியாவில் பெண்களுக்கான ஆர்ட்டிஸ்ட் ஆசிய சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி நடந்தது. வால்ட் பிரிவில் இந்தியாவின் பிரனதி நாயக் 30, பங்கேற்றார். பைனலில் 13.466 புள்ளி பெற்ற பிரனதி, மூன்றாவது இடம் பிடிக்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது. சீனாவின் ஜங் இஹான் (13.650), வியட்நாமின் நிகுயேன் தி (13.583) தங்கம், வெள்ளி வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை புரோதிஸ்தா சமந்தா, 13.016 புள்ளி எடுத்து நான்காவது இடம் பிடித்தார்.

மூன்றாவது பதக்கம்
ஆர்ட்டிஸ்ட் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பிரனதி வென்ற மூன்றாவது பதக்கம் இது. முன்னதாக 2019ல் உல்லன்பட்டர், 2022ல் தோஹா போட்டியில் இரு வெண்கலம் வென்று இருந்தார்.

Advertisement