பெண்கள் 'டி-20' உலக கோப்பை: அட்டவணை வெளியீடு

துபாய்: பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை அட்டவணை வெளியானது. பைனல் (2026, ஜூலை 5), லார்ட்சில் நடக்கவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதன் 10வது சீசன், அடுத்த ஆண்டு (ஜூன் 12 - ஜூலை 5) இங்கிலாந்தில் நடக்கவுள்ளது. இத்தொடருக்கான அட்டவணை வெளியானது.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. 24 நாட்களில் பைனல், அரையிறுதி உட்பட 33 போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்காக பர்மிங்காம், பிரிஸ்டோல், லீட்ஸ், லண்டன் லார்ட்ஸ், லண்டன் ஓவல், மான்செஸ்டர், சவுத்தாம்டன் என 7 இடங்கள் தேர்வாகின.
போட்டியை நடத்தும் இங்கிலாந்து, 'நடப்பு சாம்பியன்' நியூசிலாந்து, இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 4 இடத்துக்கு தகுதிச் சுற்று நடத்தப்படும். மொத்தமுள்ள 12 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடும். முடிவில், 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்திய அணி, 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, தகுதிச் சுற்றின் மூலம் தேர்வாகும் 2 அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. 2026, ஜூன் 14ல் (பர்மிங்காம்) தனது முதல் லீக் போட்டியில் களமிறங்கும் இந்தியா, அதன்பின் ஜூன் 17 (லீட்ஸ், தகுதிச் சுற்று அணி), ஜூன் 21 (மான்செஸ்டர், எதிர்: தென் ஆப்ரிக்கா), ஜூன் 25 (மான்செஸ்டர், தகுதிச் சுற்று அணி), ஜூன் 28ல் (லார்ட்ஸ், எதிர்: ஆஸி.,) விளையாடுகிறது.
இரண்டு அரையிறுதி போட்டிகளும் (ஜூன் 30, ஜூலை 2) லண்டன், ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளன. பைனல், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 5ல் நடக்கும்.
மேலும்
-
கர்நாடகாவில் 10 மணி நேரம் வேலை? தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு!
-
'தக் லைப்' வெளியிட மாட்டோம்! கர்நாடக விநியோகஸ்தர் அறிவிப்பு
-
'கோமுல்' பால் உற்பத்தியாளர் பேரவை தேர்தல்: 13 இயக்குநர் பதவிக்கு காங்.,கில் 2 அணி போட்டி
-
ஆப்பரேஷன் சிந்துார் டி - சர்ட்
-
ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பிக்கலாம்
-
நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்