உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்

உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்களின் அடுத்த நிலைகளான பர்ஷவகோணம் (அ) பக்கவாட்டு கோண நிலை, வீராசனம் (முதல் நிலை) மற்றும் வீராசனம் (இரண்டாம் நிலை) செயல்முறைகளை இந்த வாரம் பார்ப்போம்.
பர்ஷகோண ஆசனம் (அ) பக்கவாட்டு கோண நிலை
திரிகோண நிலையின் மாறுபட்ட நிலையில் இருந்து மூச்சை உள்ளிழுத்தபடி இடது கையை முடிந்த அளவிற்கு நீட்டவும். இந்த நீட்டுதலால் ஏற்படும் உணர்வை இடுப்பில் இருந்து கை நுனிகள் வரை உணர வேண்டும். நீட்டியுள்ள கையை பார்க்கவும். 10 எண்ணும் வரை இதே நிலையில் இருக்க வேண்டும்.
மூச்சை உள்ளிழுத்தபடி மாறுபட்ட திரிகோண நிலைக்கு திரும்பவும். அதே சுவாசத்தில் இடைப்பட்ட நிலைக்கு வந்து வீராசனம் செய்ய வேண்டும். அதாவது கால்களை நேராக வைத்து நின்று தலை மற்றும் கால் ஒரு பக்கம் திருப்பியிருக்க வேண்டும்.
மூச்சை உள்ளடக்கி வலது காலையும், தலையையும் இடப்பக்கம் திருப்ப வேண்டும். நின்ற நிலையில் சமஸ்திதி நிலைக்கு திருப்பி உடல் தளர்வு பெறும்வரை ஆழ்ந்து சுவாசிக்கவும். இடது மற்றும் வலது பக்கங்களில் மேலும் இருமுறை திரும்ப செய்யவும். இடது மற்றும் வலப்பக்கங்களில் ஆசன நிலையை செய்து முடித்து பின்புதான் ஓய்வெடுக்க வேண்டும்.
வீராசனம் முதல்நிலை
சமஸ்திதி நிலையில் இருந்து மூச்சை வெளியிட்டபடி குதித்து கால்களை முடிந்த அளவிற்கு அகலமாக வைக்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்து வலது காலையும், தலையையும் வலது பக்கமாக திருப்பவும். மூச்சை வெளியிட்டபடி வலது முட்டியை 90 டிகிரி கோணத்திற்கு மடிக்கவும். கைகள் தோளில் இருந்து நீட்டிய நிலையில் உடல் நேராக மற்றும் மார்பு பகுதியை நன்கு விரித்த நிலையில் இருக்க வேண்டும்.
மூச்சை நீண்டு சுவாசித்து 10 வரை எண்ணவும். உள்மூச்சில் எழுந்து நிற்கவும். மூச்சை அடக்கி வலது கால் மற்றும் தலையை நேராக திருப்பி, இடது காலையும், தலையையும் இடப்பக்கமாக திருப்பவும். மூச்சை வெளியிட்டு இடது முட்டியை மடக்கவும்.
இந்நிலையில் நீண்டு சுவாசித்து 10 வரை எண்ணவும். பின் உடலை நேராக எழுப்பி, இடது காலையும், தலையையும் நேராக திருப்ப வேண்டும். மூச்சை வெளியிட்டு கைகளை பக்கவாட்டில் வைத்து, சமஸ்திதி நிலைக்கு குதித்தபடி திரும்பவும். சற்று ஓய்வெடுத்தபின் இரு பக்கங்களில் இருமுறை திரும்ப செய்யவும்.
வீராசனம் இரண்டாம் நிலை
சமஸ்திதி நிலையில் இருந்து மூச்சை உள்ளிழுத்தபடி குதித்து கால்களை முடிந்த அளவிற்கு அகலப்படுத்தவும். தோளுக்கு நேராக கைகளை நீட்ட வேண்டும். மூச்சை அடக்கி, வலது கால் மற்றும் தலையை வலப்பக்கம் திருப்பி முட்டியை 90 டிகிரி கோணத்தில் மடிக்கவும். மூச்சை வெளியே அடக்கி உடலை திருப்பி கைகளை விரிக்கவும். மூச்சை உள்ளிழுத்து கைகளை தலைக்கு மேல் அஞ்சலி முத்திரையில் வைக்கவும். தலையை உயர்த்தி கைகளை பார்க்கவும். இடது கால் நேராகவும், வலது கால் மடிந்த நிலையில் இருக்கும். 10 எண்ணிக்கைக்கு பிறகு மூச்சை வெளியிட்டு கைகளை பிரித்து தோள்கள் அளவில் நீட்ட வேண்டும். மூச்சை வெளியிட்டபடி கைகளை நேரே வைத்து முட்டியை நீட்டவும்.
தலையையும், வலது காலையும் நேரே வைக்கவும். பின் தலையையும், காலையும் இடது பக்கம் திருப்பவும். இதே நிலைகளை இடப்பக்கமும் திரும்பச் செய்யவும். பின் சமஸ்திதி நிலைக்கு திரும்பவும். ஓய்வெடுத்து இருபக்கங்களிலும் இருமுறை மறுபடியும் செய்ய வேண்டும்.
பிற நிலை ஆசனங்கள் அடுத்த வாரம்...
மேலும்
-
நடுவானில் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: டில்லியில் அவசரமாக தரையிறக்கம்
-
சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி
-
கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
-
ஏ.டி.ஜி.பி.,க்கு எதிரான கைது உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்; வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்