2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு; ஒரு சவரன் 74,120!

1

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 74,120க்கு விற்பனை ஆகிறது.


தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,200 ரூபாய்க்கும்; சவரன், 73,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (ஜூன் 18) தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 9,250 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 74,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


இந்நிலையில் இன்று (ஜூன் 19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 74,120க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,265க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

Advertisement