சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

டெக்சாஸ்: அமெரிக்காவில் சோதனை முயற்சியின் போது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்து ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனையை செய்து அசத்தி வருகிறது.
அந்த வகையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் விண்ணில் செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ராக்கெட் ஏவுவதற்கு முன்பே, சோதனை கட்டத்திலேயே வெடித்து சிதறியது. இதனால், தீப்பிழம்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பவில்லை என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அடுத்த முயற்சி
ஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் 10வது ராக்கெட்டின் சோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
@block_G@
3வது தோல்வி
கடந்த ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் நிகழ்ந்த இரு சோதனைகள் தோல்வியடைந்தன. தற்போது, 3வது முறையாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. இது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் எலான் மஸ்கின் திட்டத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது. block_G


மேலும்
-
ஆங்கிலத்தில் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித்ஷா உறுதி
-
உடல், மனரீதியாக குணமடைய வேண்டும்; மருத்துவமனையில் உள்ள பா.ம.க., எம்.எல்.ஏ.,க்களை சொல்கிறார் அன்புமணி!
-
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா
-
தக்லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!
-
3 நாடுகள் பயணம் நிறைவு: டில்லி திரும்பினார் பிரதமர் மோடி
-
"போகப் போகத் தெரியும்": அன்புமணி குறித்து கேள்விக்கு பாட்டுப் பாடிய ராமதாஸ்!