மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி: கிளப் உலக கோப்பை கால்பந்தில்

பிலாடெல்பியா: கிளப் உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, யுவென்டஸ் அணிகள் வெற்றி பெற்றன.
அமெரிக்காவில், உலகின் முன்னணி கிளப் அணிகளுக்கு இடையிலான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 21வது சீசன் நடக்கிறது. மொத்தம் 32 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
பிலாடெல்பியாவில் நடந்த 'ஜி' பிரிவு லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து), வைடாட் அத்லெடிக் கிளப் (மொராக்கோ) அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த அணிக்கு பிலிப் வால்டர் போடன் (2வது நிமிடம்), ஜெர்மி டோகு (42வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
யுவென்டஸ் வெற்றி: வாஷிங்டனில் நடந்த மற்றொரு 'ஜி' பிரிவு லீக் போட்டியில் அல் ஐன் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), யுவென்டஸ் (இத்தாலி) அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த யுவென்டஸ் அணி 5-0 என வெற்றி பெற்றது. யுவென்டஸ் அணி சார்பில் கோலோ முவானி (11, 45+4வது நிமிடம்), பிரான்சிஸ்கோ கான்சிகாவோ (21, 58வது) தலா 2, கெனன் யில்டிஜ் (31வது) ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
மாட்ரிட் 'டிரா': மயாமி கார்டனில் நடந்த 'எச்' பிரிவு லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), அல்-ஹிலால் (சவுதி அரேபியா) அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என 'டிரா' ஆனது. மாட்ரிட் அணிக்கு கார்சியா டோரஸ் (34வது நிமிடம்), அல்-ஹிலால் சார்பில் நெவெஸ் (41வது) தலா ஒரு கோல் அடித்தனர்.
மேலும்
-
அரபி கல்லுாரிகளில் ஐ.எஸ்., பயங்கரவாத பயிற்சி; தற்கொலை படைகளை உருவாக்கியது அம்பலம்
-
'கிளி ஜோசியம் பார்த்தேன்; பா.ம.க.,வில் குழப்பம் தீரும்'
-
பயங்கரவாதிகளின் புகலிடம் கோவை?
-
அழித்தார் விபூதி; எடுத்தார் 'செல்பி' திருமாவளவனின் அவசர கெட்டப்
-
'முதல்வர் கண்ணில் இதெல்லாம் படக்கூடாது' ராகுல் பேனரை அகற்றிய போலீசார்
-
தி.மு.க., கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு; உண்மை என்கிறார் காங்., முன்னாள் தலைவர்