மல்யுத்தம்: பிரியா 'தங்கம்'

உங் டாவ்: வியட்நாமில் 17, 23 வயதுக்குட்பட்ட நட்சத்திரங்களுக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 23 வயது பிரிவில் போட்டிகள் நடந்தன. இந்தியாவின் பிரியா மாலிக், முதல் இரு போட்டியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 3வது போட்டியில் பிரியா 3-0 என கிர்கிஸ்தானின் கயர்குல்லை வீழ்த்தி, தங்கம் கைப்பற்றினார்.
68 கிலோ பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் சிர்ஷ்டி, பைனலில் வியட்நாமின் யுகி லியுவை சந்தித்தார். இதில் 10-0 என வென்ற சிர்ஷ்டி, தங்கம் வசப்படுத்தினார்.
மற்றொரு பைனலில் இந்தியாவின் ரீனா (55 கிலோ), கிர்கிஸ்தானின் அருகியை 13-4 என்ற கணக்கில் வென்று, தங்கம் வசப்படுத்தினார். 50 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் பிரியான்ஷி, 4-2 என மங்கோலியாவின் முன்கெரெலை சாய்த்து, தங்கம் கைப்பற்றினார். இதுவரை இந்தியா, 4 தங்கம், 1 வெள்ளி என 5 பதக்கம் வென்றுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரபி கல்லுாரிகளில் ஐ.எஸ்., பயங்கரவாத பயிற்சி; தற்கொலை படைகளை உருவாக்கியது அம்பலம்
-
'கிளி ஜோசியம் பார்த்தேன்; பா.ம.க.,வில் குழப்பம் தீரும்'
-
பயங்கரவாதிகளின் புகலிடம் கோவை?
-
அழித்தார் விபூதி; எடுத்தார் 'செல்பி' திருமாவளவனின் அவசர கெட்டப்
-
'முதல்வர் கண்ணில் இதெல்லாம் படக்கூடாது' ராகுல் பேனரை அகற்றிய போலீசார்
-
தி.மு.க., கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு; உண்மை என்கிறார் காங்., முன்னாள் தலைவர்
Advertisement
Advertisement