கலைஞர் 'டிவி' ஸ்ரீராம் மறைவு

சென்னை:கலைஞர் 'டிவி' வணிக ஆலோசகர் கே.ஸ்ரீராம், 56. மாரடைப்பால் காலமானார்.
விஜய் 'டிவி' பொது மேலாளராக, 16 ஆண்டு கள் பணியாற்றிய ஸ்ரீராம், அந்த சேனலை வெற்றிகரமான பொழுதுபோக்கு சேனலாக மாற்றியதில், பெரும் பங்கு வகித்தவர்.
இதனால், தொலைக்காட்சி துறையில், பிரபலமாக அறியப்பட்டவர். தற்போது கலைஞர், 'டிவி' வணிக ஆலோசகராக பணியாற்றி வந்தார். சங்கரா 'டிவி' உள்ளிட்ட சில சேனல்களுக்கு, ஆலோசகராகவும் இருந்து வந்தார். 'கவசம் டிவி' என்ற பக்தி 'யு- டியூப்' சேனலை நடத்தி வந்தார்.
நேற்று காலை அலுவலகத்தில் பணியில் இருந்த போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். மறைந்த ஸ்ரீராமுக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
ஸ்ரீராம் மறைவு செய்தி அறிந்து, காவேரி மருத்துவமனைக்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் கலைஞர் 'டிவி' நிர்வாகிகள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும்
-
'பாஸ்வேர்டை மாற்றுங்கள்' 1,600 கோடி 'லாகின்' தகவல் கசிவு
-
விமான பாதுகாப்புக்கு குறைந்த நிதி; பார்லி., நிலைக்குழு அதிருப்தி
-
பாலத்தில் கற்களால் கவிழும் வாகனங்கள் சின்னாளபட்டியில் நீடிக்கும் அலட்சியம்
-
குளங்களை துார்வாரி மதகுகளை சீரமையுங்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முறையீடு
-
உலக யோகா தினம் கொண்டாட்டம்
-
ஆக்கிரமிப்பு, நெரிசலில் சிக்கித்தவிக்கும் சின்னாளபட்டி