புரோ லீக் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்

ஆன்ட்வெர்ப்: புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 1-5 என, பெல்ஜியத்திடம் வீழ்ந்தது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் 6வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக பெல்ஜியம் சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, தனது 13வது போட்டியில் பெல்ஜியத்தை எதிர்கொண்டது. இதில் ஏமாற்றிய இந்திய அணி 1-5 என தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு தீபிகா (6வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.
தொடர்ச்சியாக 5வது தோல்வியை பெற்ற இந்திய அணி, 2 வெற்றி, 3 'டிரா', 8 தோல்வி என 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இன்று, இந்தியா, பெல்ஜியம் அணிகள் மீண்டும் மோதுகின்றன.
ஆண்களுக்கான போட்டியில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய இந்திய அணி 3-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement