இன்டீரியர் , எக்ஸ்டீரியர் கண்காட்சி கோலாகலம்

கோவை : யுனைடெட் டிரேட் பேர் இந்தியா பிரைவேட் நிறுவனம் நடத்தும், தென் மாநிலங்களின் முதன்மை இன்டெக்ஸ் இன்டீரியர், எக்ஸ்டீரியர் கண்காட்சி, கோவை கொடிசியா கண்காட்சி அரங்கில் நடக்கிறது.
இக்கண்காட்சியை, கோவை மண்டல சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர் ராஜதுரை திறந்து வைத்தார். துணைத் தலைவர் பழனிச்சாமி கலந்துகொண்டார்.
கண்காட்சியில் வீடு வாங்க, கட்ட, உட்புற வெளிப்புற வடிவமைப்பு, பர்னிச்சர், வண்ண விளக்குகள், வால் பேப்பர்ஸ் உள்ளிட்ட பொருட்கள் வாங்க, 120 க்கு மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஸ்டால் அமைத்து, குறைந்த விலையில் பொருட்களை வழங்குகின்றனர்.
கண்காட்சியில் பொருட்கள், 60 சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கின்றன. இன்றுடன் நிறைவுபெறும் கண்காட்சியை, காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம் என, கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த யுனைடெட் டிரேட் பேர் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் பாக்கியராஜ் தெரிவித்தார்.