த . வெ . க ., தலைவர் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ரிஷிவந்தியம் : பிரம்மகுண்டத்தில் த.வெ.க., தலைவர் விஜய்யின், 51வது பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வாணாபுரம் அடுத்த பிரம்மகுண்டத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி அய்யாவு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட மாணவரணி பிரான்சிஸ், ஒன்றிய நிர்வாகி மூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் சுந்தரமூர்த்தி பங்கேற்று, 350 பெண்களுக்கு புடவை; 250 பேருக்கு டிபன் பாக்ஸ்; உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் விஜயகுமார், அப்துல்அமீது, அய்யனார், சதாம்உசேன், துரைராஜ், கலீல், அமீர், சையத்ரஜாத், அப்பாஸ், கலைதர்ஷன், அய்யப்பன், ரவி, மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல், வடபொன்பரப்பி, ரங்கப்பனுார், ராவுத்தநல்லுார், புதுப்பேட்டை, புதுப்பட்டு, லக்கிநாயக்கன்பட்டி, கீரனுார், மேல்சிறுவளூர், கானாங்காடு, தொழுவந்தாங்கல் உட்பட பல்வேறு கிராமங்களிலும் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும்
-
மணிக்கு 160 கி.மீ., வேகம்; டில்லி-மீரட் இடையே நமோ பாரத் ரயில் சோதனை வெற்றி!
-
இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் கடும் அவதி
-
உள்நாட்டில் தயாரித்த தற்கொலைப்படை டிரோன் 'நாகாஸ்திரா': கொள்முதலுக்கு ராணுவம் உத்தரவு
-
ஈரானில் 6 விமான நிலையங்களில் தாக்குதல்; 15 போர் விமானங்களை அழிப்பு; இஸ்ரேல் அறிவிப்பு
-
மாம்பழம் கொள்முதல்; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு