மாநில ஜூனியர் கால்பந்து சென்னை அணி அறிவிப்பு
சென்னை, மாநில அளவில் நடக்க உள்ள ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் பங்கேற்கும், சென்னை மாவட்ட அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்பந்து அமைப்பு சார்பில், ஆண்களுக்கான மாநில ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, சாத்துார் கால்பந்து மைதானத்தில், வரும் 26ம் தேதி துவங்க உள்ளது. இதில், அனைத்து மாவட்ட அணிகளும் பங்கேற்க உள்ளன. இதில் பங்கேற்போர் விபரத்தை, சென்னை மாவட்டக் கால்பந்து அமைப்பு அறிவித்துள்ளது.
சென்னை அணி விபரம்:
ஷெரீப், வி.பிரசன்னா, பி.ஞானசூரியன், ஜெ.மாதேஷ், டி.தக்ஷணாமூர்த்தி, கே.ரிஷிபிரசாத், ஆர்.கே.நிவேத், பி.யோகேஷ், இ.பி.லதிசரன், ஜி.சுஜீத், ஏ.ஆர்ச்சிபால்ட், வி.ஆதிஷ், ஜி.சதீஷ், எஸ்.தமேஷ், ஆர்.தமிழ்செல்வன், கே.யுவனேஷ்வரன், ஆர்.ரித்தீஷ் மற்றும் டி.ரிஷிகேஷ்.
போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட சென்னை அணி, வரும் 25ம் தேதி சாத்துார் செல்ல உள்ளது.