பழனிசாமி தான் முதல்வர்: பா.ஜ.,

1

சென்னை:சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:

தமிழகத்தில், வரும் 2026ல் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்குள் பிரச்னை என்பதை, கனவிலும்கூட நினைத்துப் பார்க்க வேண்டாம். இந்த கூட்டணி உண்மையான கூட்டணி; வெல்லும் கூட்டணி. பழனிசாமி முதல்வராக பதவியேற்பார்.

பா.ஜ., நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியாகும். தேர்தல் வர இருப்பதால், கட்சியில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டியுள்ளது. சினிமா பிரபலங்கள் இடம்பெறுவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement