பட்ஜெட்டில் வராத கூடுதல் கடன்; குறைவாக வாங்கிய தமிழகம்

புதுடில்லி : தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள், கடந்த 2024--25 நிதியாண்டில், தங்களின் பட்ஜெட்டுக்கு அப்பாற்பட்ட கடன் வாங்குதலை கணிசமாக குறைத்துள்ளதாக, மத்திய நிதி அமைச்சக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மாநிலங்களின் சிறந்த நிதி மேலாண்மைக்கு ஒரு சான்றாகப் பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டுக்கு அப்பாற்பட்ட கடன்கள் என்பது மத்திய, மாநில அரசுகளால் நேரடியாக இல்லாமல், மறைமுகமாக வாங்கப்படும் கடன்களை குறிக்கிறது. இத்தகைய கடன்கள், பொதுவாக பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற அரசுக்கு சொந்தமான நிறுவனங்களால் பெறப்படுகின்றன.
ஆனால், இவற்றின் அசல் மற்றும் வட்டி, அரசின் பட்ஜெட்டில் இருந்து செலுத்தப்படும். இவை பட்ஜெட் கணக்குகளின் கீழ் வராததால், நிதிப் பற்றாக்குறையை குறைத்து மதிப்பிட வழிவகுக்கும்.
எனவே, இவ்வாறு வாங்கும் கடன்களின் மதிப்பு குறைவாக இருப்பதே, நிதி ஸ்திரத்தன்மைக்கு நன்மையானது என கூறப்படுகிறது.
மாநிலங்கள் 2022 - 23 2023 - 24 2024 - 25ஆந்திர பிரதேசம் 1,976 613 -அசாம் 853 1,102 1,801பீஹார் 687 53 -சத்தீஸ்கர் 2,283 780 584ஹரியானா 22 - -கர்நாடகா 4,029 - 5,258கேரளா 6,709 4,688 983மத்திய பிரதேசம் 564 374 694மகாராஷ்டிரா 2,500 7,700 18,440மனிப்பூர் 185 153 110மேகாலயா 64 6 12பஞ்சாப் 484 1,675 4சிக்கிம் 121 - -தமிழகம் 1,121 1,560 28தெலங்கானா 9,597 2,546 1,422உத்தர பிரதேசம் 3,488 - -மேற்கு வங்கம் 1,089 - -மொத்தம் 35,772 21,250 29,336ரூபாய் கோடியில்
மேலும்
-
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்
-
'சிந்தடிக்' போதை பயன்படுத்துவோர் அதிகரிப்பு; இளைஞர்களின் மனநலம் பாதிக்கும்!
-
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்போது உத்தரவு பிறப்பிக்கும்: உயர்நீதிமன்றம் கேள்வி
-
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு