வடிகால் வாய்க்கால் துார்வார கோரிக்கை 

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு 25 கண்மதகு வடிகால் வாய்க்காலில் புதர்களை அகற்றி துார்வார வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பு கூட்ரோடு அருகில் 25 கண்மதகு வடிகால் வாய்க்கால் உள்ளது. வீராணம் ஏரியில் இருந்து மழை, வெள்ளக் காலங்களில் வெளியேற்றப்படும் உபரி நீர் வெள்ளாறு அணைக்கட்டில் தேக்கி வெள்ளாறுராஜன் வாய்க்காலில் திறந்து விடப்பட்டு 25 கண் மதகு வழியாக செல்கிறது.

இ்நிலையில், வாய்க்கால் துார் வாரப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால், ஆங்காங்கே செடிகள், மரங்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. மழைக் காலங்களில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் 25 கண்மதகு வடிகால் வாய்க்காலில் புதர்களை அகற்றி துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement