பணி ஆணை வழங்கல்

புதுச்சேரி : புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில் பதவி உயர்வு வழங்கப்பட்ட உதவிப் பொறியாளர்களுக்கு நிரந்தர பணி ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 1987ம் ஆண்டு இளநிலைப் பொறியாளராக பணியமர்த்தப்பட்ட பொறியாளர்களில் 25 பேர், கடந்த 2019 முதல் 2022 வரை உதவிப் பொறியாளர்களாக (பொறுப்பு) பதவி உயர்வு வழங்கப்பட்டது.

அனைத்து உதவி பொறியாளர்களும் பதவி உயர்வு வேண்டி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து, முதல்வர் ரங்கசாமி நிரந்த உதவிப்பொறியாளராக பணி ஆணை வழங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமைப் பொறியாளர் வீரசெல்வம் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Advertisement