வெஸ்ட் இண்டீசை வென்றது ஆஸ்திரேலியா

பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 159 ரன்னில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்டில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 180, வெஸ்ட் இண்டீஸ் 190 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 92/4 ரன் எடுத்து, 82 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஹெட் (61), வெப்ஸ்டர் (63) அரைசதம் அடித்தனர். அலெக்ஸ் கேரி, 65 ரன் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 310 ரன்னில் ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீசின் ஷமார் ஜோசப் 5 விக்கெட் சாய்த்தார்.
பின் 301 ரன் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் தடுமாறியது. ஹேசல்வுட் 'வேகத்தில்' கேம்பெல் (23), கீசி கார்டி (20), பிரண்டன் கிங் (0), கேப்டன் சேஸ் (2) அவுட்டாகினர். வெஸ்ட் இண்டீஸ், 27 ஓவரில் 86/8 ரன் என திணறியது.
75 நிமிடம் கூடுதலாக நடந்த 3வது நாள் ஆட்டத்தில் ஷமார் ஜோசப், 44 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 141 ரன்னுக்கு சுருண்டு, தோல்வியடைந்தது. கிரீவ்ஸ் (38) அவுட்டாகாமல் இருந்தார்.
ஹெட் சாதனை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் டிராவிஸ் ஹெட், 10வது முறையாக ஆட்ட நாயகன் விருது வென்று சாதனை படைத்தார். அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் (தலா 5), ஹாரி புரூக் (4) உள்ளனர்.
மேலும்
-
136 அடியை எட்டியது பெரியாறு அணை நீர்மட்டம் - கேரளாவுக்கு எச்சரிக்கை
-
தமிழக ஆட்சியில் ராம ராஜ்ஜியம் இல்லை
-
400 கிலோ சல்பர் பறிமுதல்
-
நதிக்குடியில் பட்டா மாறுதல் செய்ய கிராம உதவியாளர் ரூ.500 லஞ்சம்
-
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இப்போது குழந்தை! கன்ட்ரோல் 3 பேர் கையில் என்கிறார் அன்புமணி
-
'கொடை' யில் சாரல் மழை