தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுாரில் நடந்த தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்டம், அரகண்டநல்லுார் நகர தி.மு.க., இளைஞரணி சார்பில், கடை வீதியில் அரசின் நான்காண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பு தலைமை தாங்கினார். நகர இளைஞரணி அமைப்பாளர் தினகரன் வரவேற்றார்.
நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் அக்பர், நகர பிரதிநிதி மொபின்கான், நகர துணைச்செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.
பொன்முடி எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தி.மு.க., அரசின் நான்காண்டு கால சாதனைகளை பேசினார்.
தலைமை பேச்சாளர் கென்னடி, நகராட்சி சேர்மன் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகர இளைஞரணி அமைப்பாளர் விக்னேஷ் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement