தாழ்வான மின்கம்பிகளை உயர்த்த கோரிக்கை

திருப்புத்துார்: திருப்புத்துார் பெரியார் நகரில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்த மின்துறையினரிடம் குடியிருப்புவாசிகள் கோரியுள்ளனர்.

திருப்புத்துாரின் விஸ்தரிப்பு பகுதிகளில் ஒன்று பெரியார் நகர். வீடுகள் அதிகரித்து வரும் தென்மாப்பட்டு கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் உள்ள குறுக்கு ரோட்டில் கம்பங்களுக்கிடையே சில இடங்களில் மின்கம்பி தாழ்வாக செல்கின்றன.

இந்த ரோட்டில் உயரமான வாகனங்கள் செல்லும் போது கம்பிகளில் உரசி தீ விபத்துக்குஉள்ளாகும் அபாயம் உள்ளது. இதனால் மின்பராமரிப்பின் போது மின் கம்பிகளை உயர்த்திக்கட்ட இப்பகுதியினர் கோரியுள்ளனர்.

Advertisement