மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 48 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.


சேலம் மாவட்டம், மேட்டூர் அணை, மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி.,யாகும். கடந்த, 12ல் அணை நீர்மட்டம், 114 அடி, நீர் இருப்பு, 85.58 டி.எம்.சி.,யாக இருந்தது. அன்றைய தினம் அணையில் இருந்து டெல்டா குறுவை சாகுபடிக்கு, முதல்வர் ஸ்டாலின் நீரை திறந்து வைத்தார். அதன்பின், கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பின.

அந்த அணைகளில் இருந்து உபரிநீர் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. தற்போது வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.

ஒகேனக்கலில் நீர்வரத்து உயர்வு



தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியில் இருந்து 65,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. சுற்றுலா பயணிகள் வருபவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Advertisement