வில்வித்தை போட்டியில் வெற்றி

மானாமதுரை: நாமக்கல்லில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் மானாமதுரை வீர விதை அணி பயிற்சியாளர் பெருமாள் தலைமையில் வீரர்கள் கலந்து கொண்டனர்.

8 வயதுக்குட்பட்ட பிரிவில் கலை எழிலன் முதல், ஜெய மித்ரன் இரண்டாம், சுஷாந்த் 3ம் இடம், 10 வயதுக்குட்பட்ட பிரிவில் பிரனிஷ், அதிரஞ்சன், பெண்கள் பிரிவில் தேசிகா ஸ்ரீ 2ம் இடம், 12 வயதுக்குட்பட்ட பிரிவில் கிருத்திக் பில்லு 3ம் இடம், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் நித்தின் மெஸ்ஸி, அருள்குமரன்,ராஜ்குமார் முதல் இடம் பெற்றனர்.

Advertisement