பராமரிப்புப் பணிகளால் ரயில் சேவையில் மாற்றம்

மதுரை: மதுரைக் கோட்டத்தில் வாடிப்பட்டி - சோழவந்தான் இடையே நடைபெறும் பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இன்றும் (ஜூலை 1), நாளையும் கோவை - நாகர்கோவில் ரயில் (16322) திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.

திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் வசதிக்காக இன்று மட்டும் சிறப்பு ரயில் (06322) திண்டுக்கல்லில் இருந்து மதியம் 3:45 மணிக்கு புறப்பட்டு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக இரவு 9:05 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.

ஜூலை 1 (இன்று), 2, 4, 5, 7, 8, 9, 11, 12, 14, 15, 16, 30ல் செங்கோட்டை - மயிலாடுதுறை (16848), நாளை (ஜூலை 2) மயிலாடுதுறை - செங்கோட்டை (16847) ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

பயணிகள் வசதிக்காக புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

தாமதம்: ஜூலை 4ல் ராமேஸ்வரம் - சர்லபள்ளி சிறப்பு ரயில் (07696) ராமேஸ்வரத்தில் இருந்து காலை 9:10 மணிக்கு பதில் 9 மணி 50 நிமிடம் தாமதமாக இரவு 7:00 மணிக்கு புறப்படும்.

Advertisement