ஜூலையில் வெப்பம் அதிகமாக இருக்கும்

சென்னை: 'தமிழகம் உள்ளிட்ட தென் மாநில பகுதிகளில், இம்மாதம் வெப்பநிலை, இயல்புக்கு அதிகமாக பதிவாகக் கூடும்' என, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை: ஜூலை மாதம், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், மழைப்பொழிவு இயல்புக்கு குறைவாக இருக்கக் கூடும். கேரளாவிலும், தென்மேற்கு பருவ மழை இயல்புக்கு குறைவாக பதிவாகும். கேரளா, தமிழகத்தை உள்ளடக்கிய, தென் மாநிலங்களில், ஜூலை மாதம் வெப்பநிலை இயல்புக்கு அதிகமாக பதிவாகக் கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement