விசாரணைக்கைதி மரணத்தில் உடனடி நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

சென்னை: ''விசாரணை கைதி மரணம் பற்றி தகவல் அறிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: தமிழக வரலாற்றில் முக்கியமான நாளாக இன்றைய நாள் அமைய போகிறது. ஓரணியில் தமிழ்நாடு என்ற மகத்தான முன்னெடுப்பை தி.மு.க., சார்பில் தொடங்கி வைத்துள்ளேன். இன்று முதல் 45 நாட்கள் ஓரணியில் முன்னெடுப்பு நடைபெறுகிறது.
மண், மொழி, மானம்
ஜூலை 3ம் தேதி தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க உள்ளோம். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க.,வினர் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளில் சென்று சந்திக்க உள்ளனர். தமிழகத்தில் மண், மொழி, மானம் காக்க மக்களை ஒன்று திரட்டுவதே நோக்கம். மத்திய பா.ஜ., அரசால் தமிழகம், தமிழ் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஹிந்தி திணிப்பு
அறிவியல், பண்பாடு, மொழி என எல்லாவற்றிலும் தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் இருந்து வசூலிக்கப்படும் வரியை தமிழகத்தின் வளர்ச்சிக்கு தருவதில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி தருவதில்லை. தேசிய கல்விக் கொள்கை ஹிந்தி திணிப்பு கொள்கையாக மட்டுமே உள்ளது.
நிதி தருவதில்லை
@quote@தமிழரின் வரலாற்று பெருமை கீழடி அறிக்கையை வெளியிடவில்லை மத்திய அரசு. நம் முன் வைக்கும் விமர்சனங்கள் எல்லாம் தமிழகத்தின் உரிமை பிரச்னை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் அனைவர் வீட்டிலும் சென்று சந்திக்க உள்ளோம். தமிழகத்துக்கு சிறப்பு திட்டங்களை மத்திய அரசு தரவில்லை. கல்விக்கான நிதியை மத்திய அரசு தருவதில்லை. quote
சட்டசபை தேர்தல்
தமிழகத்தின் எம்.பி., தொகுதிகளை குறைக்க மத்திய அரசு திட்டம் தீட்டி வருகிறது. தமிழகத்தை எப்படி எல்லாம் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க., தயாராக உள்ளது. தயாராகி நீண்ட நாட்களாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமி இப்போது தான் மக்களை சந்திக்க போகிறார்.
நடவடிக்கை
நாங்கள் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறோம். லாக் அப் மரணம் பற்றி தகவல் அறிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க., கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
41 லட்சம் மாணவர்கள்
முன்னதாக, சென்னையில் வெற்றி நிச்சயம் என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் உன்னதமான உயர்கல்வி. இந்தியாவிலேயே வளர்ச்சி பாதையில் தமிழகம் முதலிடம். நான் முதல்வன் திட்டம் மூலம் 41 லட்சம் மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டம் மூலம், மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்களும் பயன் பெற்று வருகின்றனர்.
எனது வெற்றி
மாணவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நமது அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள், இளைஞர்களின் வெற்றியே எனது வெற்றி. மாணவர்களின் வெற்றி தான் நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி. வெற்றியை நோக்கி தான் வாழ்க்கையில் எல்லோரும் செல்கிறோம். மாணவர்களுக்கான வெற்றிப் படிக்கட்டுகளை அமைக்கவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.










மேலும்
-
இந்தியா, பாக்., சிறைகளில் கைதிகள் எண்ணிக்கை எவ்வளவு?: இரு நாட்டு கைதிகளின் பட்டியல் வெளியீடு
-
ராணுவ ஊழல் வழக்கு: ரஷ்யா முன்னாள் அமைச்சருக்கு 13 ஆண்டு சிறை
-
சட்ட விரோத கால்நடை வதை,மாட்டிறைச்சி விற்பனை: அசாமில் 133 பேர் கைது!
-
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கு: சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம்
-
ரூ.1,853 கோடியில் பரமக்குடி - ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
போலீஸ் விசாரணையில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்திடம் தி.மு.க.,வினர், டிஎஸ்பி பேரம்; அண்ணாமலை "பகீர்"