திருப்புவனம் இளைஞருக்கு நடந்தது நியாயப்படுத்த முடியாத தவறு: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ''திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாராலும் நியாயப்படுத்த முடியாதது'', என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி போலீஸ் விசாரணையின் போது அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அஜித்குமாரின் குடும்பத்தினரை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் பெரிய கருப்பன் மொபைல்போன் மூலம் அஜித்குமார் தாயார் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தாயாரிடம் ஸ்டாலின் பேசுகையில், 'ரொம்ப 'சாரி'மா. தைரியமா இருங்கள். 'ஆக்சன்' எடுக்க சொல்லி உள்ளேன். சீரியசா 'ஆக்சன்' எடுக்க சொல்லியுள்ளேன். என்ன செய்யணுமோ செய்ய சொல்றேன். மந்திரி பார்த்து கொள்வார். தைரியமாக இருங்கள். உங்களை அழைத்தில் மகிழ்ச்சி' என்றார்.
தொடர்ந்து அஜித்குமார் சகோதரரிடம் பேசிய ஸ்டாலின், ' வணக்கம் தம்பி. நடக்கக்கூடாதது நடந்து விட்டது. தைரியமா இருங்கள். 'ஆக்சன்' எடுக்க சொல்லியுள்ளேன். என்ன பண்ணணுமோ அமைச்சரிடம் சொல்லி செய்ய சொல்லயுள்ளேன். தைரியமாக இருங்கள். சம்பவம் நடந்ததும் நடவடிக்கை எடுத்துள்ளோம். கைது செய்துள்ளோம். செய்ய வேண்டியதை செய்து கொடுக்க சொல்கிறோம். நடந்ததை யாராலும் ஏற்க முடியாது. ஒத்துக்க முடியாது. தண்டனை பெற்று தருவோம்,' எனக்கூறினார்.
@twitter@
https://x.com/mkstalin/status/1940030888982847697twitter
இதனைத் தொடர்ந்து இந்த வீடியோவை 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அத்துடன் கூறியுள்ளதாவது: திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு!
கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்! இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலன் கூறியுள்ளார்.
மேலும்
-
சட்ட விரோத கால்நடை வதை,மாட்டிறைச்சி விற்பனை: அசாமில் 133 பேர் கைது!
-
கோவிலில் தேங்காய், பழம் வாங்கியதில் தகராறு; கடைக்காரர்கள் தாக்கியதில் தி.மு.க., எம்.பி., மகன் மண்டை உடைப்பு!
-
ரூ.1,853 கோடியில் பரமக்குடி - ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
போலீஸ் விசாரணையில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்திடம் தி.மு.க.,வினர், டிஎஸ்பி பேரம்; அண்ணாமலை "பகீர்"
-
புனே நகை கடையில் துப்பாக்கி முனையில் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
-
ஒன்பதாவது ஆண்டில் ஜி.எஸ்.டி., : பிரதமர் பெருமிதம், ராகுல் வருத்தம்