சட்ட விரோத கால்நடை வதை,மாட்டிறைச்சி விற்பனை: அசாமில் 133 பேர் கைது!

குவகாத்தி: அசாமில் கால்நடை பாதுகாப்பு சட்டத்தை மீறி சட்டவிரோதமாக கால்நடை வதை மற்றும் மாட்டிறைச்சி விற்பனை குற்றங்களில் ஈடுபட்டதாக 133 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு டன்னுக்கும் அதிகமான சந்தேகத்திற்குரிய மாட்டிறைச்சி பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி அகிலேஷ் குமார் சிங் கூறியதாவது:

அசாம் கால்நடை பாதுகாப்புச் சட்டம் 2021-படி,ஹிந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளிலும், கோயில்களிலிருந்து 5 கி.மீ சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மாட்டிறைச்சி விற்பனை செய்வதையும் தடை செய்கிறது.

அதன் அடிப்படையில்,மாநிலம் முழுவதும் சட்ட விரோதமாக, கால்நடைகள் வதை செய்வது மற்றும் ஹோட்டல்களில் அனுமதியின்றி மாட்டிறைச்சி விற்பனை செய்வது தொடர்பான சம்பவங்கள் நடைபெற்று வருவதாக எங்களுக்கு புகார் வந்த நிலையில், இத்தகைய குற்றச்சம்பவங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 133 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அகிலேஷ் குமார் சிங் கூறினார்.

Advertisement