புனே நகை கடையில் துப்பாக்கி முனையில் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

புனே: புனேயில் உள்ள நகை கடை ஒன்றில் அடையாளம் தெரியாத 3 பேர் துப்பாக்கி முனையில், அங்கிருந்த நகை கடை அதிபரை தாக்கி, கொள்ளை அடித்துவிட்டு தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயின் வத்கான் பத்ரக் பகுதியில் மங்கல் கட்ஜ் 55, என்பவருக்கு சொந்தமான நகை கடை உள்ளது. அங்கு இன்று பிற்பகல், அடையாளம் தெரியாத 3 பேர் துப்பாக்கி முனையில் நுழைந்து, அங்கிருந்த மங்கல் கட்ஜை தாக்கிவிட்டு நகைளை கொள்ளை அடித்து தப்பிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து நகை கடை தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் கடைக்குள் புகுந்து, இருவர் துப்பாக்கியுடன் உள்ளிருந்தவர்களை தாக்குதல் நடத்தி, ஷோரூம் கண்ணாடிகளை உடைத்துவிட்டு, மேலும் 58 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து, வெளியில் பைக்கில் காத்திருந்த மற்றொருவருடன் சேர்ந்து அந்த கும்பல் தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மர்ம நபர்களை தேடும் பணியில் குழுக்கள் அமைத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி புட்டேஜ் ஆய்வு செய்து விரைவில் கொள்ளையடித்தவர்களை அடையாளம் கண்டு கைது செய்வோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
மேலும்
-
தேர்தல் வருவதால் சி.பி.ஐ., விசாரணை: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் ஹிந்து கோவிலில் துப்பாக்கிச்சூடு: குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க இந்திய தூதரகம் வலியுறுத்தல்
-
வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
தொழிற்சாலை பாதுகாப்பு சட்டங்கள் கடுமையாக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
-
பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டது அராஜகத்தின் உச்சம்: நயினார் நாகேந்திரன்
-
முதல்வரின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்: இ.பி.எஸ்.,