ராணுவ ஊழல் வழக்கு: ரஷ்யா முன்னாள் அமைச்சருக்கு 13 ஆண்டு சிறை

மாஸ்கோ: ராணுவ ஊழல் வழக்கு தொடர்பாக, ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு துணை அமைச்சர் திமூர் இவனோவுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமூர் இவனோவ், கடந்த 2016ம் ஆண்டு ரஷ்யாவின் பாதுகாப்பு துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ராணுவ கட்டுமானத் திட்டங்களை மேற்பார்வையிட்டார். அதற்கான நிதியில் அவர், ரூ.417 கோடி அளவில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் 2024-ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். மாஸ்கோ நீதிமன்றம் திமூர் இவனோவ் குற்றவாளி என அறிவித்தது. அவரது சொத்துக்களையும் நீதிமன்றம் பறிமுதல் செய்தது. தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவ பின்னடைவுகளுக்கு பரவலாக குற்றம் சாட்டப்பட்டநிலையில், ராணுவத்தின் ஊழலை அம்பலத்திய இந்த உயர் மட்ட வழக்கு விசாரணையில் ரஷ்ய நீதிமன்றம் இன்று திமூர் இவனோவ்க்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Advertisement