இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் சதமடித்து அசத்தல்

பர்மிங்ஹாம்: இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண்டர்சன்-சச்சின் டிராபி) பங்கேற்கிறது. லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.
இரண்டாவது டெஸ்ட் இன்று பர்மிங்ஹாமில் உள்ள எழில்மிகு எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியில் பும்ரா ,ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில், நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், மற்றும் அர்ஷ்தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்திய அணி விவரம்: ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், கருண் நாயர், சுப்மன் கில்(கேப்டன்) ரிஷப் பன்ட்( விக்கெட் கீப்பர்), நிதிஷ்குமார் ரெட்டி, ரவிந்தீர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ் தீப், முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்து உள்ளது. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 87, கேஎல் ராகுல் ,2 , கருண் நாயர் 31 , பன்ட் 25, நிதீஷ்குமார் ரெட்டி 1 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் சதம்
கேப்டன் சுப்மல் கில் 102 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேலும்
-
'அப்பா, மகன் சண்டையை மறைக்க மாம்பழம் விற்கின்றனர்' வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி
-
உயிரை பறித்த ஜெனரேட்டர் புகை? துாக்கத்தில் தந்தை, 2 மகன்கள் பலி
-
ஆசிய கால்பந்து போட்டியில் இந்தியா கோல் மழை
-
எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் சி.பி.ஐ.,க்கு மாற்றுவதா? கிருஷ்ணசாமி கண்டனம்
-
ரிதன்யா வழக்கில் கைதானவர்களுக்கு வெளியில் இருந்து வரும் சாப்பாடு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடராஜர் வலம் வரும் கஜ வாகனம் சேதம்