குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது அரசு நிதி ரூ.3 லட்சம் வீண்

உளுந்துார்பேட்டை: ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஓரிரு மாதங்கள் கூட இயங்காமல் வீணாகி அரசு பணம் பழானது.

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர வழங்க வேண்டும் என அரசு முடிவு செய்து, மாவட்ட ஊராட்சி நிதியில் 3 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது.

இவை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்துார்பேட்டை, திருநாவலுார் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள துவக்கப் பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது.

அப்போது இந்திட்டம் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

ஆனால் அது வெகு நாட்கள் நீடிக்கவில்லை. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஓரிரு மாதங்களில் பழுதானது.

இவற்றை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளும், மாவட்டம் கவுன்சிலர்களும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தாலும் அவற்றை பயன்பாட்டில் இருப்பதை அவ்வபோது உறுதிப்படுத்தவேண்டும். கொள்முதல் செய்யும் போது தரமான பொருளாக வாங்கவேண்டும்.

பழுதான சுத்திகரிப்பு இயந்திரங்களை ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்கள் ,பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

@block_B@

வாரண்டியும் இல்லை கேரண்டியும் இல்லை

வீட்டில் பயன்பாட்டில் உள்ள பல்ப், டியூப்லைட்டுகளுக்கு கடைகளில் வாங்கும் போது கேரண்டி, வாரண்டி என வழங்குகின்றனர். ஆனால் 3 லட்சம் ரூபாயக்கு வாங்கப்பட்ட சுத்திகரிப்பு இயந்திரத்திற்கு வாரண்டியும், இல்லை கேரண்டியும் இல்லை என்பது கேளிகூத்தாக உள்ளது. இதனால் இவற்றை சீரமைக்க முடியாமல் அரசு பணம் வீணாகியுள்ளது. அரசு அதிகாரிகளின் தங்கள் வீடுகளுக்கு வாங்கும் விலை உயர்ந்த பொருட்களை இது போன்றுதான் அலட்சியாக வாங்குவார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். block_B

Advertisement