கன்னியம்மன் குளம் ஆக்கிரமிப்பு அகற்றி சீரமைக்க வேண்டுகோள்

திருத்தணி,:ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வரும் கன்னியம்மன் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருத்தணி ஒன்றியம், சத்திரஞ்ஜெயபுரம் ஊராட்சிக்குட்பட்டது மேதினாபுரம் கிராமம். இங்குள்ள கன்னியம்மன் குளம், 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தில் தண்ணீர் இருந்தால், கிராமத்தில் குடிநீர் பிரச்னை வராது, விவசாய கிணறுகளிலும், ஊராட்சி ஆழ்துளை கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.
இந்த குளத்தை ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த, 15 ஆண்டுகளாக குளத்தை முறையாக பராமரிக்காமல், இருப்பதால், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குளத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியும், குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய்யும் புதைக்கப்பட்டுள்ளன.
இதனால் மழை பெய்யும் போது குளத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன. இதனால் குளம் தண்ணீர் நிரப்புவதில்லை.
மேதினாபுரம் கிராம மக்கள், பலமுறை கிராம சபை கூட்டத்திலும் குளத்தை துார் வாரியும், ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை.
எனவே கிராம மக்கள் நலன்கருதி, கன்னியம்மன் குளத்தை துார்வாரி சீரமைத்தும், நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும்
-
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்
-
ஆப்கன் தலிபான் அரசை அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா!
-
வங்கதேசம் செல்லுமா இந்திய கிரிக்கெட் அணி ? விரிசல் வலுக்கிறதா ?
-
நகை திருட்டு புகார் கூறிய நிகிதா மீது துறை நடவடிக்கை: கல்லூரி கல்வி அதிகாரிகள் திட்டம்
-
செல்வப்பெருந்தகை செய்த குழப்பம்: வி.சி.க., - காங்கிரஸ் இடையே புகைச்சல்!
-
ஜூலை 15ல் இந்தியா வரும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்: அமெரிக்கா உறுதி