சிறுமிகள் திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம்

கம்பம்: காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிறுமிகள் திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம் போலீஸ் மற்றும் சுகாதாரத் துறை இணைந்து நடத்தினார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக இளம் வயது திருமணங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் சிறுமிகள் திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே, காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மைனர் பெண்கள் திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு தலைமையேற்ற மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ஜவஹர்லால் பேசுகையில், சிறுமிகள் திருமணத்தால் ஏற்படும் கர்ப்பம் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். ரத்தச் சோகை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், குறைப்பிரசவம், இடுப்பு எலும்பு வளர்ச்சியின்மையால் பிரசவத்தில் சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அத்துடன் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். எனவே சிறுமி திருமணங்களை நடத்தக் கூடாது,' என்றார்.

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் முருகன், டாக்டர் முருகானந்தன், சித்தா டாக்டர் சிராசுதீன், சிறப்பு எஸ்.ஐக்கள் மகேஸ்வரி, ஜெயந்தி, சமூக நலத் துறை அலுவலர்கள் பெளசியா பேகம், லதா, ஜோதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement